வர்த்தக நேரம் (Trading Time) :
ஏற்கனவே மேல் சொல்லப்பட்டதுதான், வாரத்தின் 5 வேலை நாட்களில் 24 மணி நேரமும் இயங்குவது சர்வதேச நாணயச் சந்தை. காரணமும் அதன் கூடவே ஓட்டியுள்ளது. அதாவது சர்வதேசம் என்றாகிவிட்டதால், ஆசிய நேர வேலை நேரத்தில் செயல்படும் ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் வங்கிகள் மற்றும் வர்த்தகர்கள் செயல்பட ஆரம்பித்துவிடுகின்றன. ஆசிய வர்த்தக நேரம் டோக்கியா வர்த்தக நேரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் JPY, AUD, NZD & தங்கம் போன்றவை மூவ்மெண்டாக இருக்கும்.
ஆசிய வர்த்தக நேரம் முடியும் தருவாயில் லண்டனை பைனான்சியல் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஐரோப்பிய வர்த்தகம் தொடங்க ஆரம்பித்துவிடும். ஐரோப்பிய வர்த்தகம் நேரத்தில் மிக அதிகமாக வர்த்தகம் நடைபெறுகிறது. இதற்கு காரணம், முதல் கட்ட நேரத்தில் ஆசிய வர்த்தகமும், முடியும் தருவாயில் அமெரிக்க வர்த்தகமும் ஐரோப்ப வர்த்தக நேரத்தோடு சேர்ந்து கொள்வதாலும், ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளின் வங்கிகளும் இணைந்து கொள்வதால் இந்த நேரத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் மார்க்கெட் செயல்படும். இது வர்த்தகர்களுக்கும் இலாபம் சம்பாதிக்க சரியான நேரமாக கருதப்படுகிறது. ஐரோப்ப வர்த்தக நேரத்தில், EUR, GBP, JPY, CHF, GOLD, Crude Oil போன்றவை மூவ்மெண்டாக இருக்கும்.
மூன்றாவது கட்ட வர்த்தக நேரத்தில், ஐரோப்பாவோடு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் இணைந்து கொள்வதால், இந்த நேரம் மார்கெட் மிகவும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். இந்த நேரத்தில் EUR, DOLLAR, CAD, GPB, JPY, Gold, Crude Oil, US Stock/Share Market போன்றவை மூவ்மெண்டாக இருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், நமது கிராமத்தில் கடைகள் காலை திறந்து இரவு 10 மணி க்கு மூடிக் கொண்டாலும், மதுரை பஸ் ஸ்டாப், சென்னை கோயம்பேடு, சென்ட்ரல் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருப்பது போல, பாரக்ஸ் சந்தைக்கு உலகின் பல மூலையிலிருந்தும் வர்த்தகர்கள் 24 மணி நேரமும் வந்து கொண்டே இருப்பதால் 24 மணி நேரமும் ஓயாது செயல்படுகிறது. அதில், நமது இந்திய நேரப்படி காலை 7 - 9.30 வரை ஆசிய + ஐரோப்பா வர்த்தகம், மதியம் 12 - 2.30 ஐரோப்பா, மாலை 5.30 - இரவு 8.30 வரை ஐரோப்பா + அமெரிக்கா வர்த்தகம் ஆகிய நேரங்களில் மார்க்கெட் நல்ல ஏற்ற இறக்கத்துடன் அதிகப்படியான பைப்ஸ் நிமிடந்தோறும் மூவ் ஆவதால் வர்த்தகம் செய்ய உகந்த நேரமாக கருதப்படுகிறது. மற்ற நேரங்களில் மார்கெட் மூவிங்க் இருக்கும் என்றாலும், இக்குறிப்பிட்ட நேரங்களில் அரசு மற்றும் வங்கி டேட்டாஸ் ரிலீஸ் ஆவதும் நடைபெறுகிறது.

No comments:
Post a Comment