Sunday, June 12, 2016

EMPTY GREEN, SOLID GREEN,EMPTY RED, SOLID RED ள்ள வேறுபாடுகளை எப்படி வெளிக்காட்டுகிறது

CANDLESTICK CHART உருவங்களை எளிதாக புரிந்து கொள்ள அதன் வண்ணங்களை பயன்படுத்தி அறியலாம் என்றும், அந்த வண்ணங்கள் பச்சை மற்றும் சிகப்பு என்ற இரண்டு நிறத்தில் இருக்கும் என்றும், இதில் பச்சை நிறம் சந்தையில் ஏற்ப்பட்ட உயர்வையும், சிகப்பு நிறம் சதையில் ஏற்ப்பட்ட வீழ்ச்சியையும் குறிக்கின்றது என்றும் பார்த்தோம்,
மேலும் இந்த வண்ணங்களின் உதவி கொண்டு நாம் CHART படங்களை பார்க்கும் போது அந்த இரண்டு வண்ணங்களில் இரண்டு வேறுபாடுகளை காணலாம் என்றும், அவைகள் EMPTY GREEN, SOLID GREEN மற்றும் EMPTY RED, SOLID RED என்று இரண்டு வகையாகும் என்றும் கடந்த வாரம் பார்த்தோம், தற்பொழுது இந்த வண்ணங்களான EMPTY GREEN, SOLID GREEN,  என்பவை எப்படி தனக்குள் உEMPTY RED, SOLID REDள்ள வேறுபாடுகளை வெளிக்காட்டுகிறது என்று பார்ப்போம், (இங்கு நான் சொல்லி வருவது எல்லாம் அடிப்படை விஷயங்கள் இந்த விஷயங்கள் உங்களுக்கு அனிச்சை செயல் போல் CHART பார்த்த மாத்திரத்தில் புரிந்து விட வேண்டும், ஆகவே புரியும் வரை திரும்ப திரும்ப படித்து பார்த்து புரிந்து கொண்டு பின் மேலே தொடருங்கள் நான் முன்பே சொன்ன மாதிரி முதலில் சற்று கடினமாக இருக்கும் பிறகு எளிதாகி விடும், ஆகவே வரும் வரை விடாதீர்கள்),  
முதலில் இங்கு நான் கொடுத்துள்ள EMPTY GREEN, SOLID GREEN, EMPTY RED, SOLID RED என்ற வண்ணங்கள் எப்படி இருக்கும் என்று கீழே உள்ள படம் 1 ஐ பாருங்கள்,  
படம் 1 (படங்களைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மேல் அழுத்தவும்)

பார்த்து விட்டீர்களா, சரி இப்பொழுது இந்த வண்ணங்கள் எப்படி தனது நிறத்தில் வேறு பாடுகளை காட்டுகிறது என்று புரிகிறது அல்லவா, சரி அடுத்து நாம் CHART ஐ பார்க்கும் போது இந்த வண்ணங்களில் வேறுபாடுகள் இருந்தால் அதற்க்கு என்ன அர்த்தம் என்று பார்ப்போம்,  
EMPTY GREEN:-  
EMPTY GREEN என்பது அன்றைய வர்த்தகம் தொடங்கிய புள்ளியில் இருந்து உயர்ந்து அந்த புள்ளிக்கும் மேலே முடிவடைவது  

SOLID RED:-  

SOLID RED என்பது அன்றைய வர்த்தகம் தொடங்கிய புள்ளியில் இருந்து வீழ்ச்சி அடைந்து அந்த புள்ளிக்கும் கீழே முடிவடைவது  
SOLID GREEN:-  
பொதுவாக EMPTY GREEN என்றால் OPEN புள்ளியை விட உயர்ந்து முடிவடைவது என்று பார்த்தோம் இல்லையா, ஆனால் இந்த SOLID GREEN என்பது தொடங்கிய புள்ளியில் இருந்து உயராமல் கீழே வந்து முடிவடைந்து இருப்பது, இதன் படி இந்த மாதிரி முடிவடைந்ததை நாம் SOLID RED என்று தான் சொல்லுவோம் ஆனால் நான் ஏன் SOLID GREEN என்று சொல்கிறேன் என்று பார்ப்போம்  
அதாவது இவ்வாறு இறங்கி முடிவடைந்து இருந்தாலும் முதல் நாள் ஏற்ப்பட்ட அந்த பங்கின் CLOSE புள்ளியை விட இன்று நடந்த CLOSE புள்ளியானது உயரத்தில் இருப்பது அதாவது முதல் நாள் CLOSE புள்ளிக்கு மேலே முடிந்து இருந்தால் நாம் SOLID RED என்ற வண்ணத்தில் காணாமல் SOLID GREEN என்ற வண்ணத்தில் காண்கின்றோம், இதற்க்கு அர்த்தமாக நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம்,  
அதாவது அன்றைய தினம் அந்த குறிப்பிட்ட பங்கு வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் அந்த பங்கு முதல் நாள், தான் முடிவடைந்த விலையை விட கீழே செல்லாமல் அந்த விலைக்கு மேல் முடிவடைந்து இருக்கின்றது என்று அர்த்தம், இன்னும் சரியாக சொல்லவேண்டுமானால் சந்தையில் நடக்கும் ஒரு நிகழ்வின் மூலம் சொல்லலாம் எளிதாக புரியும், அதாவது GAP UP OPEN என்ற முறையில் தொடங்கி தொடர்ந்து தாக்கு பிடிக்க முடியாமல் கீழே இறங்கி வந்து முடிவு மட்டும் (CLOSE) முதல் நாள் CLOSE புள்ளிக்கு மேல் முடிவது (எல்லா SOLID GREEN என்ற உருவமும் இந்த மாதிரி தான் GAP UP முறையில் இருக்கும் என்று சொல்ல வில்லை உங்களுக்கு எளிதாக புரிய வேண்டுமே என்று சொல்கிறேன்)  
இதன் படி அந்த பங்கு அடுத்த நாட்களில் இன்றைய HIGH புள்ளியை மேலே கடக்குமானால் தொடர்ந்து உயரும் என்று எடுத்துக்கொள்ளலாம், LOW புள்ளியை கீழே கடக்குமானால் தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்றும் எடுத்துக்கொள்ளலாம் (இதற்க்கு இன்னும் சில விஷயங்கள் உதவி செய்ய வேண்டும் அதை பிறகு பார்ப்போம்), புரிகிறதா புரியவில்லை என்றால் மறுபடி மறுபடி படியுங்கள், இல்லையேல் எனக்கு உங்கள் சந்தேகங்களை மின் அஞ்சல் செய்யுங்கள்,  
சரி அடுத்து EMPTY RED என்ற நிறத்தை பற்றி பார்ப்போம்  
பொதுவாக SOLID RED என்றால் OPEN புள்ளியை விட கீழே இறங்கி வீழ்ச்சியடைந்து முடிவடைவது என்று பார்த்தோம் இல்லையா, ஆனால் இந்த EMPTY RED என்பது தொடங்கிய புள்ளியில் இருந்து வீழ்ச்சியடையாமல் மேலே உயர்ந்து முடிவடைந்து இருப்பது, இதன் படி இந்த மாதிரி முடிவடைந்ததை நாம் EMPTY GREEN என்று தான் சொல்லுவோம், ஆனால் நான் ஏன் EMPTY RED என்று சொல்கிறேன் என்று பார்ப்போம்  
அதாவது இவ்வாறு உயர்ந்து முடிவடைந்து இருந்தாலும் முதல் நாள் ஏற்ப்பட்ட அந்த பங்கின் CLOSE புள்ளியை விட இன்று நடந்த CLOSE புள்ளியானது கீழே இறங்கி முடிவடைந்து இருப்பது, அதாவது முதல் நாள் CLOSE புள்ளிக்கு கீழே முடிந்து இருந்தால் நாம் EMPTY GREEN என்ற வண்ணத்தில் காணாமல் EMPTY RED என்ற வண்ணத்தில் காண்கின்றோம்,  
இதற்க்கு அர்த்தமாக நாம் இப்படி எடுத்துக்கொள்ளலாம் அதாவது அன்றைய தினம் அந்த குறிப்பிட்ட பங்கு உயர்வை அடைந்து இருந்தாலும் அந்த பங்கு முதல் நாள், தான் முடிவடைந்த விலையை விட கீழே சென்று, அந்த விலைக்கும் கீழ் முடிவடைந்து இருக்கின்றது என்று அர்த்தம் இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் GAP DOWN OPEN என்ற முறையில் தொடங்கி தொடர்ந்து முன்னேறி வந்து முடிவு மட்டும் (CLOSE) முதல் நாள் CLOSE புள்ளிக்கு கீழ் முடிவது (எல்லா EMPTY RED என்ற உருவமும் இந்த மாதிரி தான் GAP DOWN முறையில் இருக்கும் என்று சொல்ல வில்லை உங்களுக்கு எளிதாக புரிய வேண்டுமே என்று சொல்கிறேன்)
இதன் படி அந்த பங்கு அடுத்த நாட்களில் இன்றைய HIGH புள்ளியை மேலே கடக்குமானால் தொடர்ந்து உயரும் என்று எடுத்துக்கொள்ளலாம், LOW புள்ளியை கீழே கடக்குமானால் தொடர்ந்து வீழ்ச்சி அடையும் என்றும் எடுத்துக்கொள்ளலாம், (இதற்க்கு இன்னும் சில விஷயங்கள் உதவி செய்ய வேண்டும் அதை பிறகு பார்ப்போம்), புரிகிறதா புரியவில்லை என்றால் மறுபடி மறுபடி படியுங்கள், இல்லையே எனக்கு உங்கள் சந்தேகங்களை மின் அஞ்சல் செய்யுங்கள், சரி மேலே உள்ள விளக்கங்களை தெளிவாக விளக்கும் விதமாக இந்த படத்தினை பாருங்கள்  
படம் 2  
சரி உருவங்களின் வகைகளை பார்த்தாகி விட்டது அடுத்து LINE CHART என்ற வடிவத்தை பற்றியும் சொல்லி விடுகிறேன், இது ஒரு OVERALL VIEW என்று வைத்துக்கொள்ளலாம் இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் ஒருவரை 10 மீட்டருக்கு அப்பால் வைத்து பார்ப்பது போன்றது, இதில் ஒன்றும் கவனிக்க வேண்டிய விசயங்களாக எதையும் சொல்வதற்கு இல்லை, நாம் முன்னர் பார்த்த அந்த இரண்டு வடிவங்களில் எது உங்களுக்கு பயிற்ச்சி செய்ய உதவியாக புரிந்து கொள்ள எளிமையாக இருந்க்கின்றதோ அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள், 
இது தான் சிறந்தது, இல்லை! இல்லை! இது தான் சிறந்தது என்று சொல்ல முடியாது உங்களின் கை பழக்கத்திற்கு எது ஏதுவாக, எளிதாக இருக்கின்றதோ அதனை பயன் படுத்திக்கொள்ளுங்கள், கீழே உள்ள LINE CHART படத்தை பாருங்கள்  

படம் 3  
சரி இது வரை TECHNICAL ANALYSING கற்று கொள்வதற்கு தேவையான சில அடிப்படை விசயங்களை பார்த்தாகி விட்டது, இனி மேல் அடுத்து நேரிடையாக TECHNICAL வகுப்பிற்குள் செல்ல போகிறோம் அதற்க்கு முன் இதுவரை நாம் பார்த்து வந்த இந்த 9 பதிவுகளையும் ஒரு முறை, அல்லது இரண்டு முறை படித்து விடுங்கள், 

MACD,ADX Indicator களை பற்றி

Indicator களாக Moving Average , RSI ஆகிய  இரண்டை  பற்றியும் 
பார்த்து வந்தோம், தற்பொழுது  மேலும் சில  முக்கியமான Indicator களை பற்றி பார்ப்போம், 
MACD

MACD என்பது Moving Average Convergence and Divergence என்று அழைக்கப்படும், இந்த Indicator ஐ வைத்து நாம் ஒரு பங்கை எந்த புள்ளியில் வாங்கலாம், எந்த புள்ளியில் விற்கலாம் என்ற முடிவுக்கு வரலாம், இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால் இந்த indicator இல் இரண்டு கோடுகள் மேலும் கீழும் சென்று வரும், இதில் ஒரு கோடு MACD என்று அழைக்கப்படும் மற்றொன்று நாம் முன்னர் பார்த்த EXPONENTIAL MOVING AVERAGE கோடு ஆகும் இந்த EMA கோடானது 9 என்ற நாட்களின் அளவை கொண்ட EMA ஆகும்,

சரி இந்த indicator ஐ எப்படி நாம் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன், அதாவது இந்த இரண்டு கோட்டில் MACD என்ற கோடு "0" என்ற புள்ளியை மேலே கடந்தால் அந்த குறிப்பிட்ட பங்கை நாம் வாங்கலாம், அதே போல் இந்த MACD கோடானது "0" என்ற புள்ளியை கீழே கடந்தால் அந்த குறிப்பிட்ட பங்கை விற்கலாம், இவ்வாறு நாம் இந்த indicator ஐ பயன்படுத்தி வர்த்தக முடிவுகளை எடுக்கலாம், (வெறும் இந்த indicator ஐ மட்டும் வைத்து 100% சரியான முடிவுக்கு வரமுடியாது, இதனுடன் நமது Technical Analysis அறிவையும் சேர்த்து தான் சரியான முடிவுகளை எடுக்க முடியும்),

அதே நேரம்  இதில் மற்றொரு EMA 9 என்ற கோடும் உள்ளது என்று பார்த்தோம் இல்லையா, இந்த இரண்டு கோடுகளும் (EMA, MACD) ஒன்றுக்கொன்று cross ஆவதை வைத்தும் நாம் Buying மற்றும் Selling  முடிவுகளையும் எடுக்கலாம், அதாவது இந்த MACD என்ற கோடு EMA 9  என்ற கோட்டை மேலே கடந்தால் அது முதல் Buying Signal ஆகும், இவ்வாறு ஏற்பட்ட பின் அடுத்து நாம் முன்னர் பார்த்தது போல MACD கோடு  "0" என்ற புள்ளியை மேலே கடந்தால் அது இரண்டாவது  Buying Signal ஆகும்,

இப்படி  ஏற்பட்டு Technical  ஆக  சில  வடிவங்கள் break out என்ற நிலையை பெற்று நல்ல volume நடக்குமானால்! நன்றாக அந்த பங்கை வாங்கலாம், அதே போல் இந்த MACD என்ற கோடு EMA 9  என்ற கோட்டை கீழே  கடந்தால் அது முதல் Selling  Signal ஆகும், இவ்வாறு ஏற்பட்ட பின் அடுத்து நாம் முன்னர் பார்த்தது போல MACD கோடு  "0" என்ற புள்ளியை கீழே  கடந்தால் அது இரண்டாவது Selling  Signal ஆகும், இதற்க்கு பின் முன்னர் பார்த்த விஷயங்கள் யாவும் தொடர்ந்து நடந்தால் Selling செய்யலாம், இப்படியாக இந்த indicator நாம் நமது வர்த்தகத்திற்கு பயன்படுத்தலாம்,

சரி இந்த MACD என்று கோடு எப்படி வந்தது என்றும் பார்த்து விடுவோம்,   அதாவது இரண்டு அளவுள்ள  Moving Average கோடுகள் ஒன்றுடன் ஒன்று Cross ஆகும் போது, ஏற்படும் விளைவுகளை வெளிப்படுத்தும் ஒரு Indicator ஆகும்,   இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நாம் முன்னர் பார்த்த EMA (EXPONENTIAL MOVING AVERAGE) களில் 26  என்ற நாட்களின் அளவுள்ள EMA வையும், 12 என்ற நாட்களின் அளவுள்ள EMA வையும் எடுத்து,  இதில் 12 என்ற EMA கோடு 26 என்ற EMA கோட்டை மேலே கடந்தால் இந்த MACD indicator இங்கு "0" என்ற புள்ளியை மேலே கடக்கும், அதே போல் 12 என்ற EMA கோடு 26 என்ற EMA கோட்டை கீழே  கடந்தால் இந்த MACD indicator இங்கு "0" என்ற புள்ளியை கீழே கடக்கும்,

ஆகவே இந்த 12 EMA மற்றும் 26 EMA என்ற இரண்டு கோடுகளும் ஒன்றுக்கொன்று தங்களை Cross செய்வதை வெளிப்படுத்தும் விதமாக இந்த MACD என்ற indicator செயல்படுகிறது, இதில் இந்த 12 EMA, 26 EMA என்ற அளவுகளுக்கு பதில் வேறு சில எண்களை போட்டு! அதன் விளைவுகள் சரியாக இருந்தால்! அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், அது உங்களின் ஆராய்ச்சியையும் அனுபவத்தையும் பொறுத்தது ,,, சரி MACD யின் படத்தை பாருங்கள்   

MACD Picture:  
ADX

ADX என்பது Averages Direction Movement Index என்று அழைக்கப்படும், இந்த ADX indicator வெறும் Buying, மற்றும் selling signal மட்டும் தராமல் அந்த குறிப்பிட்ட   Trend இன் சக்தியையும் நமக்கு வெளிப்படுத்துகிறது , சரி இதை பற்றி விளக்கமாக பார்ப்போம், இந்த ADX Indicator இல் மூன்று விதமான கோடுகள் இருக்கும், இந்த கோடுகளை வைத்து தான் நாம் நமது buy அல்லது sell முடிவுகளை எடுக்கவேண்டி இருக்கும்,

அதாவது இந்த ADX எனப்படும் மொத்த indicator இல் “ D+ ” மற்றும் “ D - “ என்ற indicator கோடுகளும்,  ADX எனப்படும் மற்றுமொரு  supporting tool கோடும் இருக்கும் , (இதை indicator என்று சொல்வதைவிட Catalyst! அதாவது  வினை  ஊக்கி என்று சொல்வது தான் சரியாக இருக்கும்), இந்த மூன்று கோடுகள் தங்களுக்குள் நகர்ந்து கொள்வதை வைத்து தான்! நாம் நமது buying மற்றும் selling முடிவுகளை எடுக்க வேண்டும், 

MOVING AVERAGE பற்றி 2

moving average பற்றி பார்த்து கொண்டு இருந்தோம்,
மேலும் இதில் பயன்படுத்தப்படும் கால அளவுகளை பற்றியும் பார்த்து வந்தோம், சரி அது போன்று பயன்படுத்தப்படும் கால அளவுகளின் கோடுகளை நாம் charting s/w ல் பயன்படுத்தும் போது, இந்த கோடுகளை வைத்து முக்கியமான சில முடிவுகளை நாம் வர்த்தகத்திற்கு சாதகமாக எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன்  இல்லையா, அதை பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்,

உதாரணமாக நாம் கால அளவுகளில் 4, 9, 18, 50, 200, போன்ற நாட்களின் moving average களை பயன் படுத்துகிறோம் என்றும் சொல்லி இருந்தேன் இல்லையா, இந்த நாட்களின் moving  average கோடுகளானது, வருசயாக ஒரு பங்கின் chart படங்களில் இருக்கும், இப்படி இருக்கும் போது இந்த கோடுகள் பங்குகளின் நகர்வுகளுக்கு தகுந்தாற் போல் மேலும் கீழும் ஏறி இறங்கி நகர்ந்து கொண்டே இருக்கும், இவ்வாறு நகரும் போது இந்த கோடுகள் ஒரு சில இடங்களில் ஒரு சில விளைவுகள் தரும் அது போன்ற விளைவுகள் என்ன என்ன என்று பார்ப்போம்,

அதாவது ஒரு பங்கு மேலிருந்து  கீழே வரும் போது அந்த பங்கின் moving average கோடுகளானது, முதலில் நான்கு நாள் moving average  கோடும், அதற்க்கு கீழ் ஒன்பது நாள் moving average  கோடும், அதற்கும் கீழ் 18 நாள் moving average  கோடும், அதற்கும் கீழ் 50 நாள் moving average  கோடும் அதற்கும் கீழ் 200 நாள் moving average  கோடும், அமைந்து இருக்கும், இவ்வாறு இருக்கும் இந்த கோடுகள் ஒவ்வொன்றும் அந்த பங்கு கீழே வரும் போது support இடங்களாக  செயல்படும்,   இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக 18, 50, 200 ஆகிய நாட்களுக்கான moving average கள் செயல்படும்,

ஏனெனில் அந்த குறிப்பிட்ட பங்கின் 18 நாட்களுக்கான சராசரி closing விலை என்பது அந்த கொடு உள்ள புள்ளியாகும், அப்படி பார்க்கும் போது 18 நாட்களாக அந்த பங்கு தனது closing விலையை கடந்து கீழே வருவது சற்று சிரமம், அதாவது 18 நாட்களாக கட்டி காப்பாத்திய விலை சரிந்து போவது அவளவு எளிதல்ல அல்லவா, அப்படி அந்த புள்ளியையும்  கீழே கடந்து வருமானால் அந்த பங்கு தனது சக்தியை இழந்து வருகிறது என்று தானே அர்த்தம், ஆகவே தான் இறங்கும் போது இந்த 18 நாள் moving average முக்கியமான support ஆக செயல்படும்,

இந்த கோட்டையும் கீழே கடந்தால் அடுத்த முக்கியமான support என்று 50 நாள் moving average கோட்டை சொல்லலாம், அடுத்து 200 நாள் moving average இப்படி இந்த மூன்று கோடுகளும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த  support புள்ளிகளாக செயல்படும், ஆகவே இந்த புள்ளிகளின் அருகில் பங்குகள் வரும் போது சந்தை துணை நிற்கும் சூழ்நிலை வந்தால், இந்த கோடு தொட்டு நிற்கும் புள்ளிகளில் இருந்து உயரும் வாய்ப்புகளை அந்த பங்கு பெரும்,

அதே போல் கீழிருந்து ஒரு குறிப்பிட்ட  பங்கு மேலே வரும் போது இதே நாட்களின் கோடுகள் தடை புள்ளிகளாக செயல்படும்,  அதே போல் மேலும் சில விசயங்கள நாம் பார்க்கலாம் அதாவது மேலே குறிப்பிட்ட moving average களின் கோடுகள் எல்லாம் ஒரே புள்ளியில் ஒன்று சேரும் போதும், ஒன்று சேர்ந்து பிரியும் போது சில முக்கியத்துவம்  நிறைந்த நிகழ்ச்சிகள் அந்த குறிப்பிட்ட பங்குகளில்  நடைபெறும், அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும் போது நமக்கு நல்ல  லாபங்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படும், அது போன்ற நிகழ்வுகளை பற்றி பார்ப்போம்,

உதாரணமாக மேலே குறிப்பிட்ட ஐந்து நாட்களுக்கான moving average கோடுகளும் chart படத்தில் ஒரே புள்ளியில் ஒன்று சேர்ந்து, அந்த அனைத்து கோடுகளையும் அந்த பங்கின் விலை மேலே தாண்டி செல்லும் போது, அதன் நகர்வுகள் இன்னும் அதிகமாக மேலே செல்லும் வாய்ப்புகள் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம், இதற்க்கு வேறு சில உருவ அமைப்புகளின் break out உம் நமக்கு கிடைத்து இருந்தால், இதனை நன்றாக உறுதி செய்து நாம் அந்த பங்கினை வாங்கலாம்,

மேலும் அடுத்து இந்த கோடுகளில் 18, 50,  என்ற கோடுகளை கீழே கடந்தால் லாபங்கள் போதும் என்று விற்று விட்டு வந்து விடலாம், அல்லது அதற்க்கு முன்னர் கூட நீங்கள் விற்று விட்டு வரலாம், அதே போல் இந்த ஐந்து கோடுகளும் ஒன்று சேர்ந்து இருக்கும் போது அந்த பங்கின் விலை புள்ளியானது இந்த கோடுகளை எல்லாம் கீழே கடந்து செல்லும்படி நேர்ந்தால், தொடர்ந்து இறக்கம் இருக்கும் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம், இதற்க்கு moving average convergence and divergence என்று பெயர்,  இப்படியாக இந்த moving average கோடுகள் நமக்கு அநேக விசயங்களை சொல்லும், இப்படி முக்கியத்துவம்  நிறைந்த moving average களின் படங்களை பாருங்கள்,

MOVING AVERAGE PICTURE 1:

RSI

RSI என்பது ஒரு குறிப்பிட்ட பங்கின் நகர்வுகளின் சக்தியை தீர்மானிக்கும் குறியீடாகும், அதாவது இந்த குறியீடானது பெண்டுலம் போல் மேலும் கீழும் ஏறி இறங்கி வருவது ஆகும், இதன் துணை கொண்டு நாம் அந்த பங்கு தற்பொழுது நகர்ந்து கொண்டிருக்கும் திசையில் தொடர்ந்து நகருமா! என்பதினை ஓரளவிற்கு தீர்மானிக்கலாம்,

அதாவது  இந்த குறியீடானது 0 (பூஜ்ஜியம் முதல் நுறு வரை) முதல் 100 வரை மேலும் கீழும் ஆடி ஒரு குறிப்பிட்ட எண்களை மேலே கடந்து தொடர்ந்து சென்றால், அந்த பங்கு தொடர்ந்து உயரும் என்றும், அதே போல் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இருந்து கீழே வந்தால், வீழ்ச்சிகள் ஏற்படலாம் என்றும் ஓரளவிற்கு நாம் அனுமானத்திர்க்கு வரலாம்,

அதன் படி  இந்த RSI என்ற INDICATOR 30 என்ற புள்ளியை கீழிருந்து மேல் நோக்கி கடந்து தொடர்ந்து உயருமானால், அந்த குறிப்பிட்ட பங்கானது தொடர்ந்து உயரும் வாய்ப்புகளை பெரும் என்று வைத்து கொள்ளலாம், (இந்த குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் வைத்து நாம் 100% சரியான முடிவுக்கு வர முடியாது), அதே போல் தொடர்ந்து உயர்ந்து மேலிருந்து கீழாக 70 என்ற புள்ளியை கீழே கடந்து வருமானால், இந்த பங்கில் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகலாம் என்று எடுத்துக்கொள்ளலாம்,

இப்படியாக அந்த பங்கின் நகர்வின் சக்தியை  நமக்கு உணர்த்தும் INDICATOR ஆக இந்த RSI செயல்படும், மேலும் இந்த RSI இல் இரண்டு விஷயங்கள் உள்ளது, அதையும் பார்த்து விடுவோம், அதாவது இதில் POSITIVE DIVERGENCE, மற்றும்  NEGATIVE DIVERGENCE என்று இரண்டு விஷயங்கள் உள்ளது இதனை பற்றியும் பார்ப்போம் ,,,

POSITIVE DIVERGENCE:

POSITIVE DIVERGENCE என்பது! இந்த RSI INDICATOR மேலே உயர்ந்து இதனை ஒட்டி இந்த RSI க்கு உரிய பங்கின் விலை சற்று கீழ் நோக்கி நகர்ந்தாலோ, அல்லது நகராமல் ஒரு குறிப்பிட்ட இரண்டு புள்ளிகளுக்கு இடையே மட்டும் நகர்ந்தாலோ, அல்லது நகர்வின் வேகம் குறைவாக இருந்து  VOLUME அதிகமானாலோ, இந்த பங்கு விரைவில் உயர போகிறது என்று அர்த்தம் கொள்ளலாம் அதன் படி வாங்கவும் செய்யலாம், இவ்வாறு இருப்பது POSSITIVE DIVERGENCE ஆகும் , அதாவது RSI உயர்ந்து பங்கின் விலை உயராமல் இருப்பது, அப்படி இருந்தால் விலை விரைவில் உயரும் என்று கொண்டு வாங்கலாம்,,,

NEGATIVE DIVERGENCE:

NEGATIVE DIVERGENCE என்பது RSI INDICATOR DOUBLE TOP, அல்லது வேறு ஏதேனும் தடைகளை சந்திக்கும் வாய்ப்புகள் அருகில் இருந்து, அல்லது RSI அதிகப்படியான உயரத்தில் இருந்து, அல்லது RSI உயராமல் இருந்து, பங்கின் விலை மட்டும் நன்றாக VOLUME இல்லாமல் உயருமானால்,  இந்த பங்கில் தொடர்ந்து உயரும் சக்தி குறைந்து வருவதாகவோ, அல்லது சக்தி இல்லை என்று அர்த்தமாகி விரைவில் கீழே வரப்போகிறது என்று கொள்ளலாம், இவ்வாறு ஏற்படின் இந்த பங்கில் இருந்து வெளியே வந்து விடுவதும், அல்லது புதிதாக வாங்காமல் இருப்பதும் நல்லது,

RSI PICTURE
இப்படியாக பங்கின் விலையிலும் RSI யின் நகர்விலும் வித்தியாசங்கள் இருப்பது  NEGATIVE DIVERGENCE ஆகும்,  இந்த விசயங்களை கடந்த வாரம் திருச்சி மாநகரத்தில் நாம் எடுத்த TECHNICAL ANALYSIS வகுப்புகளில் சரியான உதாரணத்துடன் பார்த்தோம், அதாவது பெட்ரோல்  தீர்ந்து  போன பிறகு வண்டியை அங்கும் இங்கும் ஆட்டினால் கிடைக்கும் சொற்ப பெட்ரோலின் மூலம் ஓடும் வண்டியை போன்றது இந்த NEGATIVE DIVERGENCE என்பது  என்று

MOVING AVERAGE என்பது

தனிப்பட்ட கேண்டில்கள் மூலமும், ஒன்று இரண்டு கேண்டில்கள் மூலமும், ஒரு
குறிப்பிட்ட பங்கின் நகர்வுகளை நாம் எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளளாம் என்பதினை பற்றி பார்த்து வந்தோம், நாம் பார்த்து வந்த விசயங்கள் அனைத்தும், ஒரு தேர்ந்த நுட்ப ஆய்வாளகளுக்கு கை வந்த கலையாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம், ஒரு பங்கின் வரை படத்தை பார்த்த உடனே அதன் போக்கை புரிந்து கொள்பவரும், அதன் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதினை முடிவு செய்வதில் கில்லாடியாக இருப்பவரும் தான், தேர்ந்த நுட்ப ஆய்வாளர் ஆவார்.

அது போன்று ஆக வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்குமேயானால், அதற்க்கு உஙகளின் உழைப்பு மிகவும் கடினமாக இருக்க வேண்டும், எதையும் வென்றெடுக்கும் ஆசாத்திய திறமையுடன் கூடிய உழைப்பு மட்டுமே உஙகளை ஒரு தேர்ந்த நுட்ப ஆய்வாளர்களாக மாற்றும், அதற்க்கு இது போன்ற விசயங்கள் உஙளுக்கு கை கொடுக்கும், ஆகவே நமது பதிவுகள் ஒவ்வொன்றயும் கவனமாக படித்து மனதில் நிறுத்துங்கள், சரி இப்பொழுது மேலும் சில விசயங்களை பற்றி பார்ப்போம்,,,

அதாவது ஒரு பங்கின் நகர்வுகளுக்கு உறுதுணையாக இருக்கும் indicator களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம், அந்த வகையில் RSI, MACD, ADX, STOCHASTIC OSCILLATOR, PARABOLIC SAR, MOVING AVERAGE போன்றவைகளை பற்றி பார்ப்போம்

MOVING AVERAGE:-

MOVING AVERAGE என்பது ஒரு பங்கின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, அதில் சில கணக்கீடுகளை செய்து, அதன் மூலம் கிடைக்கும் அளவுகளை வைத்து, அந்த பங்கின் அடுத்த கட்ட நகர்வுகள், support, resistance, targets, stop loss போன்ற விசயங்களை அறிந்து கொள்ள பயன்படுத்தப்படும் முக்கியமான Indicator என்று சொன்னால் மிகையாகாது, இன்னும் சொல்லப்போனால் நீங்கள் அனுபவம் வாய்ந்த நுட்ப ஆய்வாளர்கள் என்ற நிலைக்கு வந்தவுடன் இந்த MOVING AVERAGE களின் கலவைகளை பயன்படுத்தி, MOVING AVERAGE CROSS OVER என்ற முறையில் ஒரு பங்கை எந்த புள்ளியில் BUY / SELL பண்ணலாம் என்ற வர்த்தக முடிவுகளை எடுக்கவும் பயன்படும்,

சரி இந்த MOVING AVERAGE ஐ பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம், MOVING AVERAGE ஐ பொறுத்தவரை மூன்று விதமான பெயர்களில் உள்ளது, ஒவ்வொன்றும் கணக்கீடுகள் செய்வதில் வெவேறு முறைகளை பெற்றுள்ளது, மேலும் அந்த கணக்கீடுகள் பற்றி தெரிந்து கொள்வதினால், நமக்கு ஒன்றும் பெரிய பயனில்லை என்றே சொல்வேன், ஏனெனில் பட்டனை தட்டினால் இட்லி என்ற முறையில் அனைத்து விதமான அளவுகளும் நீங்கள் பயன் படுத்தும் CHARTING S / W இல் மிகவும் தெளிவாக உள்ளது,

இருந்தாலும் இந்த கணக்கீடுகள் எப்படி வருகிறது என்பதினை மட்டும் சற்று விளக்கிவிடுகிறேன், என்ன வென்றே தெரியாமல் பயன் படுத்துவது தவறு இல்லையா? , அதற்க்கு முன் அந்த மூன்று விதமான பெயர்களை பற்றி பார்ப்போம் SIMPLE MOVING AVERAGE, EXPONENTIAL MOVING AVERAGE, WEIGHTED MOVING AVERAGE இதில் அதிகமாக SIMPLE MOVING AVERAGE, மற்றும் EXPONENTIAL MOVING AVERAGE என்ற இரண்டையும் பயன்படுத்துவார்கள், இன்னும் அதிகமாக EXPONENTIAL MOVING AVERAGE ஐ தான் பயன்படுத்துகிறார்கள், இதில் நான் பயன்படுத்துவது EXPONENTIAL MOVING AVERAGE ஐ தான், சரி கணக்கீடுகள் எப்படி என்று பார்ப்போம்,

பொதுவாக AVERAGE என்றால் என்ன என்பது நாம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும், சர்ரசரி என்று சொல்லுவோம் இல்லையா அது தான், இன்னும் உங்களுக்கு விளக்கமாக சொல்லவேண்டுமானால், உங்களை வைத்தே சொல்லலாம் உதாரணமாக நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் என்ற விலைக்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்பொழுது அந்த பங்கு 80 என்ற விலைக்கு வந்து விட்டது, அப்படியானால் உங்களின் விலை இறக்கம் கண்டுள்ளது, அதே நேரம் இந்த பங்கு சீக்கிரமே உயரப்போகிறது, மேலும் நீங்கள் 100 ரூபாய்க்கு வேறு வாங்கி உள்ளீர்கள், அனால் இப்பொழுது அந்த பங்கு 80 ரூபாய்க்கு கிடைக்கிறது, அப்படி என்றால் மேலும் கொஞ்சம் வாங்கிப்போட்டால், குறைந்த விலைக்கு வாங்கியது போலவும் ஆகும், அதே நேரம் உங்கள் விலையை AVERAGE செய்த மாதிரியும் ஆகும் என்ற கோணத்தில் வாங்கு வீர்கள் இல்லையால், அது போலதான்,,,

100 ரூபாய்க்கு வாங்கிய பங்கை, அதே அளவுகளில் மறுபடியும் 80 ரூபாய்க்கு வாங்கினால் உங்களின் AVERAGE விலை 90 என்ற அளவில் வந்து விடும் இல்லையா, அப்படியானால், இப்போதுள்ள விலையில் இருந்து மறுபடியும் 90 என்ற விலையை தாண்டினாலே உங்களின் லாபம் ஆரம்பம் ஆகிவிடும், மேலும் 100 ரூபாய்க்கு வந்த பின்னால் தான் உங்கள் லாபம் ஆரம்பம் ஆகிறது என்று இல்லை இல்லையா, அது போல தான் ஒரு பங்கின் நகர்வுகளின் சராசரியை வைத்து இங்கு என்ன என்னவோ செய்யலாம், இன்னும் விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்,

அதாவது ஒரு பங்கின் நகர்வின் சராசரி ! சராசரி ! (MOVING AVERAGE) என்று சொல்கிறோமே, எதன் சராசரி என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம், அதை பற்றியும் சற்று விளக்கமாக பார்த்து விடுவோம், உதாரணமாக ஒரு பங்கின் நகர்வில் முக்கியமான நான்கு விஷயங்கள் இருப்பதாக நாம் முன்னர் பார்த்து இருந்தோம் இல்லையா, அதாவது OPEN, HIGH, LOW, CLOSE என்ற அளவுகளை பற்றி, இந்த நன்கு அளவுகளின் MOVING AVERAGE களை தான் நீங்கள் அறிந்து கொள்ளலாம்,

அதாவது தோராயமாக கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் HIGH புள்ளியின் MOVING AVERAGE யும், கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் LOW புள்ளியின் MOVING AVERAGE யும், கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் OPEN புள்ளியின் MOVING AVERAGE யும், கடந்த 10 நாட்களாக ஒரு பங்கின் CLOSE புள்ளியின் MOVING AVERAGE யும், பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம், இதில் எந்த விஷயம் அதிகம் முக்கியத்த்துவம் வாய்ந்தது என்று ஒரு கேள்வி உங்களுக்கு வந்தால்,

அதற்க்கு பதிலாக ஒரு பங்கின் CLOSE புள்ளியின் MOVING AVERAGE, நாம் அநேக முக்கியமான விசயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று சொல்லமுடியும், சரி இப்பொழுது இந்த MOVING AVERAGE இன் கணக்கீடுகள் எப்படி என்று சொல்கிறேன், முதலில் SIMPLE MOVING AVERAGE இன் கணக்கீடுகளை பற்றி பார்ப்போம் (இந்த கணக்கீடை வைத்து தான் மற்ற இரண்டின் கணக்கீடுகளையும் கணக்கீடு செய்வார்கள்,)

SIMPLE MOVING AVERAGE  

SIMPLE MOVING AVERAGE இல் ஒரு பங்கின் CLOSING MOVING AVERAGE ஐ கணக்கீடு செய்ய, முதலில் எத்தினை நாட்களுக்கான AVERAGE நமக்கு வேண்டும் என்பதினை முடிவு செய்து கொள்ள வேண்டும், உதாரணமாக 10 நாட்களுக்கு தேவையான AVERAGE வேண்டும் என்றால், அந்த பங்கின் 10 நாள் CLOSING புள்ளியை குறித்துக்கொண்டு, அதை மொத்தமாக கூடி 10 ஆல் வகுத்தால், வரும் விடையே அந்த பங்கின் CLOSING புள்ளியின் 10 நாட்களுக்கான SIMPLE MOVING AVERAGE ஆகும்,

உதாரணமாக கீழ் கண்ட வகையில் ஒரு பங்கின் CLOSE புள்ளிகள் அமைந்தால் அவற்றின் MOVING AVERAGE என்ன என்று பார்ப்போம் வாருங்கள்,

நாள் / விலை 

1/110, 2/105, 3/107, 4/110, 5/103, 6/105, 7/111, 8/105, 9/114, 10/114, இப்படியாக ஒரு பங்கின் CLOSING அமைந்தால் அந்த 10 நாட்களுக்கான

CLOSING AVERAGE = 110 + 105 + 107 + 110, + 103 + 105 + 111 + 105 + 114 + 114 = 1084,

இதை 10 ஆல் வகுக்க 1084 / 10 = 108.4,

ஆக இந்த 108.4 என்ற புள்ளி தான் அந்த பங்கின் 10 நாட்களுக்கான SIMPLE MOVING AVERAGE ஆகும் (CLOSE புள்ளிகளின் அடிப்படையில்), ஆனால் இந்த 10 நாட்களுக்கான EXPONENTIAL MOVING AVERAGE (EMA) ஐ கணக்கீடு செய்தால் 108.4 என்ற புள்ளியில் இருந்து சற்று வித்தியாசப்படும்,

மேலும் SIMPLE MOVING AVERAGE ஐ விட EXPONENTIAL MOVING AVERAGE இதுவரை நான் கண்டத்தில் மிகவும் சரியான முடிவுகளை (SUPPORT, RESISTANCE ) தந்து வருகிறது, ஆகவே எனது அனுபவத்தில் நான் இந்த EMA வை உங்களுக்கு பரிந்துரைக்கின்றேன், மேலும் நீங்களும் உங்களுக்கு எது ஏற்றதாக இருக்கின்றதோ, அதனை பயன்படுத்தலாம், 

சரி எந்த எந்த கால அளவுகளை MOVING AVERAGE இல் பயன்படுத்தலாம் என்பதினை பற்றி பார்ப்போம், பொதுவாக 5 முக்கிய கால அளவுகள் உள்ளது, அவைகள் 4 நாட்களுக்கான EMA (CLOSE BASE), 9 நாட்களுக்கானவை, 18 நாட்களுக்கானவை, 50 நாட்களுக்கானவை, 200 நாட்களுக்கானவை ஆகிய 5 உம் முக்கியமானவை, இந்த MOVING AVERAGE அனைத்தும் நாம் பயன்படுத்தும் CHARTING S / W இல் கோடுகளாக அமைந்து இருக்கும், இவ்வாறு இருக்கும் இந்த EMA கோடுகளின் மூலம் நாம் எப்படி சில முடிவுகளை எடுக்கலாம்

SOLID GREEN,EMPTY RED அதனை பற்றி

SOLID GREEN :-

SOLID GREEN என்ற வண்ணத்தில் ஒரு பங்கின் CANDLE இருந்தால் குழப்பம் அடைய விஷயம் ஒன்று இல்லை, அன்றைய தினம் அந்த பங்கு இறங்கியுள்ளது என்று அர்த்தம் அதே நேரம் அந்த பங்கின் நேற்றைய CLOSE புள்ளிக்கும் மேல் இன்று CLOSE ஆகி உள்ளது என்றும் அர்த்தம், ஆகவே SOLID GREEN என்ற வண்ணத்தில் ஒரு CANDLE இருக்க வேண்டுமானால், இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும், 
ஒன்று:-

அந்த பங்கு அன்றைய தினம் இறக்கத்தில் முடிந்து இருக்க வேண்டும்

இரண்டு:-

அந்த பங்கின் முடிவு விலை நேற்றைய முடிவு விலைக்கும் மேலே இருக்க வேண்டும்

உதாரணம் :-

OPEN - 500 ,,  HIGH - 520,,  LOW   - 480,,  CLOSE – 482,, நேற்றைய CLOSE - 478

இந்த உதாரணத்தில் இந்த பங்கு 500 என்ற புள்ளியில் தொடங்கி 520 என்ற புள்ளி வரை உயர்ந்து இருந்தாலும் இந்த பங்கின் முடிவு 482 என்ற புள்ளியில் அமைந்துள்ளது, அப்படியானால் தொடங்கிய புள்ளியில் இருந்து இறங்கி முடிந்துள்ளது, மேலும் நேற்றைய CLOSE புள்ளியான 478 க்கு மேலே 482 என்ற புள்ளியில் இன்று CLOSE ஆகியுள்ளது ஆகவே இன்று SOLID GREEN என்ற வகையில் அமைந்து இருக்கும்

இதே போல் தான் EMPTY RED என்ற நிறமும் அன்றைய தினம் உயர்ந்து இருந்தாலும் நேற்றய CLOSE புள்ளிக்கும் கீழே இன்று CLOSE ஆனால் அது EMPTY RED என்ற நிறத்தில் இருக்கும்

உதாரணம் :-

OPEN - 515,, HIGH - 530,, LOW - 505,, CLOSE - 518.. நேற்றைய CLOSE - 525

இந்த உதாரணத்தில் OPEN ஆனா விலையை விட உயர்ந்து இருந்தாலும் நேற்றைய CLOSE புள்ளியை விட கீழே முடிந்து இருப்பதினால் EMPTY RED என்ற நிறத்தில் இருக்கும் புரிந்ததா ?

சரி இதுவரை பார்த்து வந்த விஷயங்களை வைத்து ஓரளவு அடிப்படை விஷயங்கள் உங்களுக்கு தெளிவாகி இருக்கும், அதன் மேற்கொண்டு சில பயிற்ச்சிகளை நாம் எடுத்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக அமையும், அந்த வகையில் இது வரை நாம் பார்த்து வந்த விசயங்களில் இருந்து சில விசயங்களை பற்றி உங்களிடம் கேள்விகளாக கேட்கின்றேன் அவைகளுக்கு பதில் எழுதி அனுப்புங்கள் சரியாக உள்ளதா என்று நானும் உங்களுக்கு பதில் தருகிறேன், அல்லது நீங்களே இதுவரை படித்த விஷயங்கள் உங்கள் ஞாபகத்தில் உள்ளதா என்று பரிசோதித்து கொள்ளவும் இந்த முயற்சி உதவியாக இருக்கும். 

கேள்விகள் சில

1) TECHNICAL ANALYSING என்றால் என்ன ?

2) TECHNICAL ANALYSING இன் தந்தை எனப்படுபவர் யார் ? அவர் சொன்ன முக்கியமான மூன்று விஷயங்கள் என்ன?

3) FUNDAMENTAL ANALYSING என்றால் என்ன ?

4) FUNDAMENTAL ANALYSING செய்வதற்கு தேவையான காரணிகள் எவை எவை?

5) FUNDAMENTAL மற்றும் TECHNICAL ANALYSINGகிற்கு இடையேயான வேறுபாடுகள் என்ன

6) TECHNICAL வரை படங்கள் வரைவதற்கு தேவையான் புள்ளிகள் எவை, எவை ?

7) TECHNICAL CHART இன் வகைகள் எவை எவை ?

8) CHART இல் உள்ள CANDLE களின் நிறங்கள் எவை ?

9) CANDLE களின் நான்கு விதமான நிறங்களின் மூலம் நீங்கள் அறிவது என்ன ?

10) கீழே கொடுத்துள்ள OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்து அதற்க்கு பொருத்தமான CANDLE STICK CHART படங்களை வரைக..

உதரணத்திற்கு சில OPEN, HIGH, LOW, CLOSE புள்ளிகளை தந்துள்ளேன், இந்த புள்ளிகளை வைத்து அதற்க்கு ஏற்ற CANDLE படங்களை அதற்க்கு உரிய நிறத்தில் வரைந்து பாருங்கள், கண்டிப்பாக செய்யுங்கள் (உங்களுக்கு உண்மையாகவே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் கண்டிப்பாக செய்யவேண்டும்), அப்படி செய்யும் போது அநேக சந்தேகங்கள் உங்களுக்கு வரும் அப்படி வரும் சந்தேகங்களை குறித்து வைத்து மொத்தமாக எனக்கு அனுப்புங்கள், கண்டிப்பாக நிவர்த்தி செய்ய ஆவலாக உள்ளேன்.
SAMPLE POINTS

1) OPEN - 400, HIGH - 422, LOW - 394, CLOSE 415

2) OPEN - 412, HIGH - 418, LOW - 400, CLOSE 414

3) OPEN - 450, HIGH - 450, LOW - 410, CLOSE 413

4) OPEN - 410, HIGH - 418, LOW - 404, CLOSE 412

5) OPEN - 403, HIGH - 418, LOW - 394, CLOSE 410

6) OPEN - 400, HIGH - 415, LOW - 400, CLOSE 409

7) OPEN - 420, HIGH - 422, LOW - 405, CLOSE 415

8) OPEN - 425, HIGH - 425, LOW - 418, CLOSE 419

9) OPEN - 400, HIGH - 422, LOW - 394, CLOSE 401

10) OPEN - 400, HIGH - 420, LOW - 394, CLOSE 400

11) OPEN - 400, HIGH - 427, LOW - 394, CLOSE 399

முக்கியமான CHART உருவங்கள்
சரி பயிற்ச்சி முடிந்த பின் அடுத்து CHART படங்களில் தோன்றும் சில முக்கியமான உருவங்களை பற்றியும், அப்படி அந்த உருவங்கள் வந்தால் அதற்க்கு சந்தையில் என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என்றும் பார்ப்போம், அதாவது நாம் ஒரு குறிப்பிட்ட பங்கை ANALYSE செய்யும் போது அந்த பங்கின் ஒவ்வொரு நாள் CANDLE ஐ பார்த்து ANALYSE செய்யக்கூடாது அதற்க்கு பதில் அந்த பங்கில் கடந்த சில வாரங்களாக அல்லது மாதங்களாக நமக்கு கிடைத்து இருக்கும் ஒவ்வொரு நாள் CANDLE களையும் வைத்து தான் ஆராய வேண்டும் அப்படி செய்தால் தான் அந்த பங்கின் நகர்வுகள் எதை நோக்கி நகர்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்,

அதே நேரம் சில சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட நாளில் தோன்றும் CHART CANDLE படங்கள் (உருவங்கள்) சில முக்கியமான அடுத்த கட்ட நகர்வுகளை தீர்மானிக்கும் சக்தியை பெற்று இருக்கும் அது போன்ற சில உருவங்களை பற்றி நாம் இப்பொழுது பார்க்க போகிறோம், இதற்க்கு பெயர் வேண்டுமானால் வெவேறு மாதிரியாக இருக்கலாம், ( DOJI, HAMER, ENGULFING, HARAMI, PIERCING LINE என்பன போன்ற அநேக விஷயங்கள் உண்டு அதில் மிக முக்கியமான சில வற்றை பற்றி பார்ப்போம் ) ஆனால் இதில் உள்ள விஷயம் என்ன என்பதை நான் முதலில் உங்களுக்கு புரிய வைத்து விடுகிறேன்,

அதாவது ஒரு குறிப்பிட்ட பங்கின் அன்றைய தின OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்து அடுத்த நாள் அந்த பங்கின் நகர்வை நாம் ஒரு 50% அளவிற்கு தீர்மானிக்கலாம் என்று கடந்த வாரங்களில் பார்த்தோம் இல்லையா, அதே தான், அந்த வகையில் சில முக்கியமான OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை ஒரு பங்கு பெற்று இருந்தால் அடுத்த நாள் சொல்லி கொள்ளும்படியான சில நகர்வுகள் நடக்கலாம் என்பது TECHNICAL கற்றவர்கள் அனைவரும் கண்ட உண்மையே, ஆகவே அது போன்ற சிறப்பான முடிவுகளை தரும் சில வகை உருவங்களை பற்றி பார்ப்போம்,

மேலும் இது போன்ற உருவங்கள் இரண்டு இடங்களில் தான் தனது முழு பலத்துடன் இருக்கும் அதாவது விமானத்தில் பல சாகசங்களை செய்தவர் எவளவு பெரிய விமானமாக இருந்தாலும் சாதித்து காட்டிவிடுவார், அனால் அவரை கப்பலில் ஏறி காட்டய்யா உமது சாகசத்தை என்று சொன்னால் நடக்குமா, இருந்தாலும் ஏதாவது முயற்சி செய்ய அவர் முயலுவார், (எல்லாமே ENGINE வகையை சேர்ந்ததுதானே என்று),

அது போல தான் நான் குறிப்பிடும் இந்த உருவ அமைப்புகள் அந்த பங்கு நன்றாக உயர்ந்து, இதற்க்கு மேல் உயர்வது கஷ்டம் என்ற நிலையில் இருக்கும் போதும், நன்றாக இறக்கத்தை சந்தித்து இனி இறங்க வழியில்லை, உயர்வுதான் என்ற நிலையில் இருக்கும் போதும் தனது முழு பலத்தை காண்பிக்கும், ஆகவே அது போன்ற விளைவுகளை தரும் முக்கியமான உருவங்களை பற்றி பார்க்க போகிறோம், 

OPEN PRICE என்ற புள்ளி அதனை பற்றி

இதுவரை நாம் பார்த்துவந்த அடிப்படை விஷயங்கள் அனைத்தும் மிக முக்கியமானதும் TECHNICAL ANALYZING பயில்வதற்கு அடிப்படையான விசயங்களும் ஆகும், இந்த விசயங்களை எப்பொழுதும் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள், அடுத்து சந்தையில் நடக்கும் சில முக்கியமான விஷயங்களைப்பற்றி பார்ப்போம், இப்பொழுது சொல்லும் இந்த விஷயங்கள் தான் TECHNICAL ANALYZE செய்வதற்கு நாம் பயன்படுத்தப்போகும் வரைபட உருவ அமைப்புகள் தோன்றுவதற்கு ஆதாரமான விஷயங்கள், அதாவது பங்கு சந்தையில் வர்த்தகம் தினமும் காலை மணி 9.55 க்கு தொடங்கி மாலை 3.30 க்கு முடிவடையும்,  
இப்படி நடக்கும் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் அனைத்தும் காலையில் தொடங்கி (OPEN), மாலை வரை வர்த்தகமாகி இறுதியில் மாலை 3.30 அளவில் முடிவடையும் (CLOSE), இந்த இடைப்பட்ட நேரத்தில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளும் மேலும் (HIGH), கீழும் (LOW) நகர்ந்து இறுதியில் ஒரு குறிபிட்ட விலையில் முடிவடையும் (CLOSE), இப்படிப்பட்ட இந்த நகர்வுகளில் ஏற்ப்படும் மிக முக்கியமான புள்ளிகளான OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகளை வைத்தே நாம் TECHNICAL வரை படங்களை உருவாக்குகிறோம், உருவாக்குகிறோம் என்றால் நாம் உக்கார்ந்து வரைவதில்லை அதற்கென SOFTWARE   உள்ளது,  
ஆகவே இந்த முக்கியமான புள்ளிகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை விளக்குவதும் முக்கியமாகிறது ஆகவே அதனைப்பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோம், இப்பொழுது சந்தையில் தினமும் ஒவ்வொரு பங்கிலும் உருவாகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE என்ற புள்ளிகள் அந்த பங்குகளின் அடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்குவதற்கு எப்படி பயன்படுகிறது என்பதினை பார்க்கலாம் அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம் அப்பொழுதுதான் TECHNICAL ANALYZING ஐ நாம் எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற கோணம் வரும்  
அதாவது எட்டு சுரக்காய் கறிக்கு உதாவது என்று ஒரு பழமொழி இருக்கிறது இல்லையா, அது போல தான் TECHNICAL RULES ஐ அப்படியே பயபடுத்தினால் இங்கு உதவாது ஆகவே இதை வேறு ஒரு கோணத்தில் தான் அணுக வேண்டும், ஆகவே இப்பொழுது நாம் பார்க்கப்போகும் இந்த OPEN, HIGH, LOW, CLOSE பற்றிய விளக்கங்கள் மூலம் உங்களது கற்பனை கோணங்கள் மாறும் அதாவது ஒரு பொருளை பார்க்கும் விதம் மாறலாம், அதாவது ரோஜா செடியில் உள்ள முட்களை பார்த்து அழகான பூவின்
செடியில் கொடூரமாய் முட்கள் என்று நினைக்காமல், முக்கியமான பொருள்களுக்கு பாதுகாப்பு மிக அவசியம் என்பதை இயற்க்கை நமக்கு எப்படி இந்த ரோஜா செடியில் இருக்கும் முட்கள் மூலம் புரியவைத்துள்ளது என்று பாசிட்டிவாக எண்ணிக்கொண்டு அதிலிருந்து நமது வாழ்க்கைக்கு தேவையான விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை பயன்படுத்துவது போல உங்கள் கோணம் மாறவேண்டும் அதன் பொருட்டே இந்த விளக்கம்,  
கவனமாக படியுங்கள், புரியவில்லை என்றாலும் மறுபடியும் மறுபடியும் விடாதீர்கள் நானா நீனா என்று பார்த்து விடுங்கள் ஏனெனில் புரிந்து கொண்டு செல்வது முக்கியம் இல்லையேல் இந்த முயற்ச்சியே தோல்வி அடையும் ஆகவே புரிந்து கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதே நல்லது, சரி இப்பொழுது ஒவ்வொன்றாக பார்ப்போம், அதாவது இந்த OPEN, HIGH, LOW, CLOSE மூலம் அந்த பங்குகள் நமக்கு என்ன சொல்ல வருகிறது என்பதை பார்க்கும் ஒரு முயற்ச்சியே, முதல் நாள் மாலை 3.30 க்கு முடிவடையும் ஒரு பங்கு அடுத்த நாள் சரியாக காலை 9.30 க்கு தொடங்கும்,  
அப்படி தொடங்கும் போது பங்கு சந்தையில் வர்த்தகமாகும் அனைத்து பங்குகளையும் வர்த்தகத்திற்காக திறந்து விடுவார்கள், (அந்த திறந்து விடும் நேரம் தான் 9.30 அப்படி வர்த்தகத்திற்காக திறந்துவிடப்படும் அனைத்து பங்குகளிலும் 9.30 மணியிலிருந்தே பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய கணக்குகள் வைத்து இருப்பவர்கள் அனைவரும்
வர்த்தகம் செய்யலாம்), அப்படி சந்தை வர்த்தகத்திற்காக திறந்தவுடன் முதலில் வர்த்தகமாகும் விலையே OPEN PRICE (துவக்க விலை) ஆகும், இந்த விலையை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்கப்போகிறோம்,  
எப்பொழுதும் நேற்று முடிவடைந்த விலையிலே மறுநாள் எந்தப்பங்கும் வர்த்தகத்தை துவங்குவதில்லை, இதில் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் உள்ளது, அதாவது முந்தய பதிவில் நாம் பார்த்த BUS STAND உதாரணத்தில் ஒரு பொருளுக்கு இருக்கும் DEMAND ஐ பொறுத்து தான் அதன் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்று படித்து இருப்பீர்கள் இல்லையா, அந்த விஷயம் தான் பங்குசந்தையில் வர்த்தகமாகும் எந்த ஒரு பங்கினுடைய OPEN விலையையும் முடிவு செய்யும் மேலும்  ஒரு பங்கு இன்று இந்த விலையில் தான் தொடங்கும் என்று கண்டுபிடிக்க எந்த விதமான TECHNICAL கூறுகளும் இங்கு (எனக்கு தெரிந்து) இல்லை,  
மேலும் யார் முதலில் வர்த்தகத்தை தொடங்கி அந்த வர்த்தகம் நடந்து முடிகிறதோ அந்த விலைதான் அன்றைய தினத்தின் துவக்க விலை, இதை யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்கலாம் (அதாவது நீங்கள் நிர்ணயிக்கும் விலை வர்த்தகம் ஆகும் அனைத்து தகுதிகளையும் பெற்று இருந்தால் OPEN விலையை நிர்ணயித்த பாக்கியம் உங்களை சேரும்), ஆகவே இந்த OPEN விலையை எந்த TECHNICAL கூறுகளாலும் நிர்ணயிக்கமுடியாது என்ற சூழ்நிலையில் தானாக வரும் (யாராவது ஒரு TRADER மூலம்) இந்த OPEN விலை அனைத்து பங்குகளின் அன்றைய தினத்தின் INITIAL என்று சொல்லலாம் அதாவது கடவுளின் விலை என்று கூட வைத்துக்கொள்ளலாம் 
சில பங்குகளில் அந்த பங்கை OPERATE செய்பவர்கள் அதன் அனைத்து விலைகளையும் முடிவு செய்வார்கள், ஆனால் நாம் அனைத்து பங்குகளையும் பற்றி பொதுவாக பேசிக்கொண்டிருப்பதால் அதை பற்றி தவிர்த்துவிடுவோம், சரி இந்த OPEN என்ற விலையின் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் அதாவது மாற்றுக்கோணம் என்னவென்றால்  
OPEN PRICE  
OPEN PRICE என்பது வெறும் ஒரு பங்கின் தொடக்க விலை மட்டும் இல்லை அன்றைய தினத்தின் அந்த பங்கின் வர்த்தக பாய்ச்சலை நிர்ணயிக்கும் முதல் புள்ளி, அதாவது அந்த பங்கில் வர்த்தகம் செய்ய நினைப்பவர்கள் அன்றைய தினத்தில் அந்த பங்கில் காட்டும் ஆர்வம் என்ன என்பதினையும், அந்த பங்கிற்கு உள்ள DEMAND என்ன என்பதினையும் சுட்டிக்காட்டும் முக்கியமான புள்ளியாக நாம் எடுத்துக்கொள்ளலாம், அந்த வகையில் இந்த புள்ளி முக்கியமானது,  
சில நேரங்களில் சில பங்குகளில் OPEN மற்றும் HIGH என்ற இரண்டு நிலையும் ஒரே புள்ளியாக இருக்கும் அப்படி இருக்கும் போது தொடர்ந்து முன்னேற முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் தடையை சந்தித்து கீழே வரும் என்று எடுத்துக்கொள்ளலாம், அதே போல் OPEN மற்றும் LOW ஆகிய இரண்டு நிலைகளையும் ஒன்றாக பெற்று இருந்தால் தொடர்ந்து கீழே இறங்க முடியாமல் அந்த குறிப்பிட்ட புள்ளியில் SUPPORT களை பெற்று தொடர்ந்து உயரும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம், ஆக வெறும் OPEN PRICE என்று எடுத்துக்கொள்ளாமல் இந்த புள்ளியை வைத்து அந்த பங்கின் நகர்வுகள் எதை நோக்கி இருக்கும் என்றும் நாம் அனுபவம் வர வர எளிதாக தெரிந்து கொள்ளலாம் --- 

DOJI யின் வகைகள் :MORNING STAR DOJI,EVENING STAR DOJI,LONG UPPER LEG DOJI,LONG LOWER LEG DOJI

என்ன நண்பர்களே பதில் தயார் செய்து விட்டீர்களா, ஓரளவிற்காவது நீங்க முன்னாள் படித்த விஷயங்கள்
ஞாபகத்தில் வருவதற்கு இந்த பயிற்ச்சி உதவி செய்ததா, அப்படியானால் சந்தோசமே, சரி நாம் அடுத்த விசயத்திற்கு வருவோம், நான் சொன்னது போல முக்கியமான சில உருவங்கள் சந்தையில் உருவாகும் போது ஏற்ப்படும் மாற்றங்கள் என்ன, மற்றும் அந்த உருவங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம், மேலும் இந்த உருவங்கள் BOTTOM OUT மற்றும் TOPS OUT என்ற நிலைகளில் நல்ல பலத்துடன் இருக்கும் அதே நேரம் நடுவிலும் இந்த உருவங்களுக்கு சக்தி இருந்தாலும் அதிக சக்திகளை எதிர்பார்க்க முடியாது, விமானி கப்பலை இயக்குவது போல, சரி விசயத்திற்கு வருவோம்..
இது போன்ற முக்கியமான உருவங்கள் சந்தைகளில் அநேகம் உள்ளது அனைத்தையும் பார்ப்பது சற்று TENSION ஐ தான் தரும் ஆகவே இந்த உருவங்களில் மிக முக்கியமான சில வற்றை பற்றி பார்ப்போம்

முக்கியமான சில உருவங்கள் :-

DOJI, HARAMI, HAMMER, ENGULFING, PIERCING LINE, 3 METHOD BEARISH & BULLISH PATTERNS, 3 WHITE SOLDIER, 3 BLACK CROWS, DOCK CLOUD COVER, இது போன்ற விசயங்களை கொஞ்சம் ஆழமாக பார்ப்போம், கண்டிப்பாக உதவியாக இருக்கும்

1. DOJI:-

முதலில் DOJI என்ற பெயருடன் ஒரு குறிப்பிட்ட பங்கின் ஒற்றை CANDLE லில் ஏற்ப்படும் வடிவத்தை பற்றி பார்ப்போம், இந்த DOJI என்பது ஒரு குறிப்பிட்ட தினத்தில் ஒரு பங்கில் ஏற்ப்படும் வடிவமாகும், ஒரு CANDLE எப்படி இருந்தால் DOJI என்று நாம் அறியலாம் என்பதை சொல்கிறேன் கவனமாக கேளுங்கள்,

அதாவது ஒரு பங்கின் அன்றைய தின OPEN PRICE மற்றும் CLOSE PRICE இரண்டிற்குமான இடைவெளி மிக மிக குறைவாக இருக்கும் சூழ்நிலையில் உருவாகும் CANDLE  DOJI எனப்படும், அதாவது அந்த பங்கு OPEN ஆனா விலையில் இருந்து உயரே எவளவு சென்றாலும், அல்லது கீழே எவளவு வீழ்ச்சி அடைந்தாலும் அல்லது மேலும் கீழும் மாறி மாறி ஏறி இறங்கினாலும் இறுதியாக தான் வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியிலோ அல்லது அந்த புள்ளிக்கு மிக மிக அருகில் சற்று மேலேயோ அல்லது கீழேயோ முடிவடைந்தால் அன்றைய தின அந்த பங்கின் CANDLE ஒரு கூட்டல் குறி போல் இருக்கும் அதற்க்கு பெயர்தான் DOJI எனப்படும்,

இந்த DOJI யில் இரண்டு வகை உண்டு, இரண்டு வெவ்வேறு இடங்களில் இது தோன்றும் போது இதற்க்கு இரண்டு வெவேறு பெயர்களும் உண்டு அவற்றை பற்றியும் பார்ப்போம், அதற்க்கு முன் DOJI யின் படங்களை பாருங்கள்

PICTURE 1:-

DOJI யின் வகைகள் :-

MORNING STAR DOJI

EVENING STAR DOJI

LONG UPPER LEG DOJI

LONG LOWER LEG DOJI

MORNING STAR DOJI :-

ஒரு பங்கின் முக்கியமான தாங்கு நிலைகளிலோ (SUPPORT ZONE) அல்லது ஒரு குறிப்பிட்ட வீழ்ச்சியை ஒரு பங்கு அடைந்த பிறகோ ஏற்ப்படும் ஒரு DOJI அமைப்பிற்கு MORNING STAR DOJI என்று பெயர், இவ்வாறு ஒரு பங்கில் குறிப்பிட்ட வீழ்ச்சிக்கு பிறகு ஏற்ப்படும் இந்த DOJI அமைப்பு நமக்கு சில கருத்துகளை சொல்லும், அதன் அடிப்படையில் இந்த பங்கு இனி மேற்கொண்டு கீழ் இறங்குவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும், இனி தொடர்ந்து முன்னேறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்,

இதன் அடிப்படையில் இந்த பங்கில் இனி தொடர்ந்து SHORT SELL செய்வது ஆபத்தை உருவாக்கும் என்றும், இனி இந்த பங்கில் BUYING செய்வதே சிறந்தது என்று எடுத்துக்கொண்டு BUYING இல் கவனம் செலுத்தலாம், MORNING STAR DOJI இன் படத்தை பாருங்கள்

PICTURE 2 :-

EVENING STAR DOJI :- 
ஒரு பங்கின் முக்கியமான தடை நிலைகளிலோ (RESISTANCE ZONE) அல்லது ஒரு குறிப்பிட்ட உயர்வை ஒரு பங்கு அடைந்த பிறகோ ஏற்ப்படும் ஒரு DOJI அமைப்பிற்கு EVENING STAR DOJI என்று பெயர், இவ்வாறு ஒரு பங்கில் குறிப்பிட்ட உயர்விற்கு பிறகு ஏற்ப்படும் இந்த DOJI அமைப்பு நமக்கு சில கருத்துகளை சொல்லும், அதன் அடிப்படையில் இந்த பங்கு இனி மேற்கொண்டு உயர்வதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் இனி தொடர்ந்து கீழ் இறங்கும் வாய்ப்புகளும் அல்லது அடுத்த கட்ட நகர்விற்கான CONSOLIDATION PHASE க்குள் நுழையும் வாய்ப்புகளும் அதிகம் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம்,

இதன் அடிப்படையில் இந்த பங்கில் இனி தொடர்ந்து BUYING செய்வது ஆபத்தை உருவாக்கும் என்றும், இனி இந்த பங்கில் இருந்து வெளியேறுவதே சிறந்தது என்று எடுத்துக்கொண்டு நாம் நம்மை பாதுகாத்து கொள்ளலாம், பொதுவாக இந்த இரண்டு வடிவங்களும் ஒரு பங்கில் அல்லது சந்தையில் TREND REVERSAL ஆக போவதை முன்கூட்டியே நமக்கு சொல்லும் வடிவமாக எடுத்துக்கொண்டு கவனமாக இருக்கலாம், EVENING STAR DOJI இன் படத்தை பாருங்கள்

PICTURE 3:-

LONG UPPER LEG DOJI :-

இந்த வடிவமானது பொதுவாக EVENING STAR DOJI யில் ஏற்ப்படும் வாய்ப்புகள் உண்டு, அதாவது ஒரு பங்கு அன்றைய தினம் தனது வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியில் இருந்து மிக அதிகமாக உயர்ந்து, உயர் நிலைகளில் தாக்கு பிடிக்க முடியாமல் கீழே வீழ்ச்சி அடைந்து OPEN விலைக்கு சற்று மேலேயோ அல்லது OPEN விலையிலோ அல்லது OPEN விலைக்கு சற்று கீழேயோ முடிவடைவது (CLOSE ஆவது) LONG UPPER LEG DOJI என்று பெயர், இது போன்ற அமைப்பு வரும் சூழ்நிலையில் இந்த பங்கில் வீழ்ச்சிகள் வரப்போகிறது, ஆகவே சற்று கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்வதாக எடுத்துக்கொள்ளலாம்

LONG UPPER LEG DOJI என்பது நீண்ட வாழ் போன்ற கோட்டினை உயரத்தில் பெற்று இருப்பது, மேலும் ஒரு பங்கு தொடர்ந்து கீழ் இறக்கத்தில் இருக்கும் போது TECHNICAL ஆக இடையே சில உயர்வுகளை சந்திக்கும் வாய்ப்புகள் உருவாகலாம் அப்படி இடையே ஏற்ப்படும் உயர்வுகளில் திடீர் என்று இது போன்ற LONG UPPER LEG DOJI என்ற வடிவத்தை பெறுமானால் இன்னும் அந்த பங்கில் கீழ் இறக்கம் (DOWN SIDE) இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம், அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் இந்த பங்கில் BUYING கவனம் செலுத்தினாலும் மிக மிக குறைவான லாபங்களுடன் வெளியேறிவிட வேண்டும் அல்லது அந்த பங்கில் BUYING நிலைகளை எடுக்காமல் இருப்பது சிறந்தது, LONG UPPER LEG DOJI இன் படத்தை பாருங்கள்

PICTURE 4:-

LONG LOWER LEG DOJI:-
இந்த வடிவமானது பொதுவாக MORNING STAR DOJI யில் ஏற்ப்படும் வாய்ப்புகள் உண்டு, அதாவது ஒரு பங்கு அன்றைய தினம் தான் வர்த்தகத்தை தொடங்கிய புள்ளியில் இருந்து மிக அதிகமாக வீழ்ச்சி அடைந்து , கீழ் நிலைகளில் தொடர்ந்து இறக்கம் காட்டாமல் தொடர்ந்து உயர்ந்து OPEN விலைக்கு சற்று மேலேயோ அல்லது OPEN விலையிலோ அல்லது OPEN விலைக்கு சற்று கீழேயோ முடிவடைவது (CLOSE ஆவது) LONG LOWER LEG DOJI என்று பெயர், இது போன்ற அமைப்பு வரும் சூழ்நிலையில் இந்த பங்கில் உயர்வுகள் வரப்போகிறது, ஆகவே SHORT SELLING இல் இருப்பவர்கள் சற்று கவனமாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்வதாக எடுத்துக்கொள்ளலாம், மேலும் இந்த பங்கில் BUYING இல் கவனம் செலுத்தலாம் என்று நமக்கு சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம்

LONG LOWER LEG DOJI என்பது நீண்ட வாழ் போன்ற கோட்டினை கீழே பெற்று இருப்பது, மேலும் ஒரு பங்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கும் போது TECHNICAL ஆக இடையே சில வீழ்ச்சிகளை (CONSOLIDATION க்காக) சந்திக்கும் வாய்ப்புகள் இருக்கலாம், அது போன்று இடையே ஏற்ப்படும் வீழ்ச்சிகளில் திடீர் என்று இது போன்ற LONG LOWER LEG DOJI என்ற வடிவத்தை பெறுமானால் இன்னும் அந்த பங்கில் உயர்வுகள் (UP SIDE) இருக்கும் என்று எடுத்துக்கொள்ளலாம்,

அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் இந்த பங்கில் நாம் தொடர்ந்து BUYING இல் கவனம் செலுத்தலாம், அதே நேரம் அதிகமாக உயர்ந்து விட்டது என்று உங்கள் நிலைகளில் இருந்து வெளியேறாமலும், முக்கியமாக SHORT SELL பண்ணாமலும் இருப்பது நல்லது LONG LOWER LEG DOJI இன் படத்தை பாருங்கள்

PICTURE 5:-
இந்த வகையில் மேலும் இரண்டு விசயங்களை நான் சொல்லியாக வேண்டும் அதாவது MORNING STAR CANDLE, மற்றும் EVENING STAR CANDLE, அதாவது இதில் DOJI என்ற வார்த்தை மாட்டும் தான் விடுபட்டுள்ளது மற்றபடி இதுவும் MORNING STAR DOJI மற்றும் EVENING STAR DOJI யின் விளைவுகளையே ஏற்ப்படுத்தும் அதாவது MORNING STAR DOJI என்பது குறிப்பிட்ட இறக்கத்திற்கு பிறகு வரும் அப்படி வந்தால் இறக்கம் தடைபட்டு உயருவதற்கு வாய்ப்புகள் ஏற்ப்படும் என்று பார்த்தோம் இல்லையா அதே விளைவுகளை தான் இந்த MORNING STAR CANDLE ம் தரும்,

ஆனால் DOJI என்பது OPEN மற்றும் CLOSE புள்ளிகளுக்கு இடையேயான இடைவெளி மிக மிக குறைவாகவோ அல்லது இடைவெளி இல்லாமலோ இருக்கும், ஆனால் இந்த MORNING STAR CANDLE லில் இடைவெளிகள் சற்று கொஞ்சம் இருக்கலாம் அதே நேரம் மற்ற அமைப்புகள் DOJI ஐ போலவே இருக்க வேண்டும் இந்த படத்தையும் பாருங்கள், இதே போல் தான் EVENING STAR CANDEL உம், EVENING STAR CANDLE உயரங்களிலும் MORNING STAR CANDLE இறக்கங்களிலும் வரும் சரி இந்த படத்தையும் பாருங்கள்

PICTURE 6:-
என்ன நண்பர்களே DOJI என்ற வடிவத்தின் முக்கியத்துவம் புரிந்ததா, அடுத்து நாம் மற்ற வடிவங்களை பற்றி பார்ப்போம்.